12 1
தொழில்நுட்பம்

இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகும் புதிய அம்சம்

Share

சமூக வளைத்தளங்களில் முன்னிலை வகிக்கும் தளமான இன்ஸ்டாகிராம் தனது பயனர்களுக்கு புதிய அம்சம் ஒன்றை வெளியிட்டுள்ளது, அதாவது இன்ஸ்டாகிராம் இன் தாயகமான மெட்டா நிறுவனம் “சேனல்” என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேனல் அம்சத்தின் மூலம் இன்ஸ்டாகிராம் படைப்பாளிகள் அவர்களது புதிய பதிவுகளை தினசரி தங்களது பின் தொடர்பாளர்களுக்கு(subscribers) இதன் மூலம் பதிவிட முடியும்.

இந்த சேனல் அம்சத்தை பயனர்கள் உருவாக்கும் போது அவர்களது கணக்கினை பின்தொடர்பவர்களுக்கு சேனலில் இணையும் படி அறிவுறுத்தும் நோட்டிபிகேஷன் உடனடியாக அனுப்பப்படும்.

இந்த சேனல் அம்சத்தில் சம்பந்தப்பட்ட கணக்கை வைத்து இருக்கும் படைப்பாளிகள் மட்டுமே புதிய பதிவுகளை இந்த சேனலில் பகிர முடியும். பின்தொடர்பாளர்களால் இந்த பதிவுகளை பார்வையிட்டு ரியாக்‌ஷன் மற்றும் லைக்கள் மட்டுமே வழங்க முடியும்.

மேலும் சேனல் பின் தொடர்பாளர்களாக இல்லாதிருக்கும் சந்தர்ப்பத்தில் குறித்த சேனலில் இருந்து எந்தவொரு செய்திகளையும் பெற முடியாது. இதேவேளை ஏற்கனவே டெலிகிராமில் இது போன்ற அம்சம் அறிமுகமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...

gallery 1768883651 696f05c3bd977
கட்டுரைதொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் AI புரட்சி: ஆரம்பகட்ட வேலைகளுக்கு ஆபத்து – ரமேஷ் தமானி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல்...

whatsapp 2025 09 03 13 23 26
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் பயனர்களே எச்சரிக்கை: உங்கள் கணக்கை முடக்கும் ‘கோஸ்ட் பேரிங்’ தாக்குதல்!

வாட்ஸ்அப் (WhatsApp Web) பயன்படுத்துபவர்களின் கணக்குகளை இணையக் குற்றவாளிகள் மிக எளிதாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...

24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...