Elektrateq
தொழில்நுட்பம்

இலங்கையின் தயாரிப்பு, சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட Elektrateq முச்சக்கரவண்டி

Share

இலங்கையின் தயாரிப்பு, சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட Elektrateq முச்சக்கரவண்டி

நேற்றைய தினம் Vega Innovations நிறுவனம் புதிய மோட்டார் பைக் ஒன்றினை சந்தைக்கு அறிமுகப்படுத்தப்போவதாக செய்தி வெளியிட்டு இருந்தோம். பலருடைய எதிர்பார்ப்பு இலத்திரணியல் மோட்டார் பைக்காக தான் இருந்து ஆனால் இன்றைய தினம் Vega Innovations நிறுவனம் இலத்திரணியல் முச்சக்கர வண்டி ஒன்றினை சந்தைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றார்கள்.

Elektrateq என அழைக்கப்படும் இந்த புதிய முழு இலத்திரணியல் முச்சக்கர வண்டியானது ஒருதடவை மின்னேற்றுவதன் மூலம் 150km வரை பயணிக்கக்கூடியதாக இருப்பதுடன் அதிகபட்ச வேகமாக மணிக்கு 60kmph இனை அடையக்கூடியதாக இருக்கும். வெறும் ஒரு மணித்தியாலத்திற்குள் 80% மின்கலத்தை மீள்நிரப்பக்கூடிய fast charging தொழில்நுட்பத்துடன் உயர்த்தபட்ச ஆற்றலாக 10kW ஆற்றலினை வெளிப்படுத்தக்கூடியது.

சாதாரண முச்சக்கரவண்டிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட உடலமைப்புடன் காணப்படுகின்றது. நாளாந்த பாவனைக்கும் சிறிய வியாபார நடவடிக்கைகளுக்கும் பொருட்களை எடுத்துச்செல்வதற்கும், Taxi போன்று பயன்படுத்துவதற்கும் ஏற்றதாக இருக்கும்.

Share
தொடர்புடையது
whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...

gallery 1768883651 696f05c3bd977
கட்டுரைதொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் AI புரட்சி: ஆரம்பகட்ட வேலைகளுக்கு ஆபத்து – ரமேஷ் தமானி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல்...

whatsapp 2025 09 03 13 23 26
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் பயனர்களே எச்சரிக்கை: உங்கள் கணக்கை முடக்கும் ‘கோஸ்ட் பேரிங்’ தாக்குதல்!

வாட்ஸ்அப் (WhatsApp Web) பயன்படுத்துபவர்களின் கணக்குகளை இணையக் குற்றவாளிகள் மிக எளிதாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...

24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...