காய்ச்சல் இருந்தா உடனே அலர்ட் செய்யும் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்! விரைவில் அறிமுகம்

4a3a9cc08c19cc7d

ஆப்பிள் நிறுவனம் காய்ச்சல் இருக்கிறதா என்பதை கண்காணிக்கும் ஒரு ஸ்மார்ட்வாட் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்யப்போகின்றது.

இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் காய்ச்சல் இருக்கிறதா என்பதை கண்காணிக்கும் டெம்பரேச்சர் சென்சாரும் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த அம்சம் மூலம் உடல் வெப்பநிலை எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். அதுமட்டுமின்றி ஒருவேளை பயனர்களுக்கு வெப்பநிலை அதிகமாக இருந்து அவர்களுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் உடனடியாக மருத்துவரை அணுகச் சொல்லி அலர்ட் செய்யும் அம்சமும் இந்த ஸ்மார்ட்வாட்சில் இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட்வாட்ச், 3 விதமான வேரியண்ட்களுடன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் வெளியீட்டு திகதி குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 #applewatch  #fever 

Exit mobile version