ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் 5ஜி வசதியை செயல்படுத்துவது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
இதற்கான ஆயத்த பணிகளை ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொண்டு வருவதாக ஆப்பிள் தெரிவித்து இருக்கிறது.
தனது சாதனங்களில் அப்டேட் வெளியிடும் முன் நெட்வொர்க் வேலிடேஷன் மற்றும் டெஸ்டிங் உள்ளிட்டவைகளை முடிக்க வேண்டும் என ஆப்பிள் தெரிவித்து இருக்கிறது.
5ஜி கனெக்டிவிட்டி வசதி கொண்ட ஐபேட் ஏர் 5th Gen மாடலுக்கு எப்போது இந்த அப்டேட் வழங்கப்படும் என்ற விவரங்களை ஆப்பிள் இதுவரை வெளியிடவில்லை. எனினும், ஐபோன்களுக்கு வழங்கும் போதே ஐபேட் மாடலுக்கும் அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 5ஜி சேவைகள் வெளியாகும் என்றும் மார்ச் 2024 வாக்கில் நாடு முழுக்க 5ஜி வழங்கப்பட இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
#Apple #Iphone
Leave a comment