தொழில்நுட்பம்
பிரபல சமூகவலைத்தினை பயன்படுத்த பணம் செலுத்த வேண்டும் – X தளத்தின் புதிய அறிவிப்பால் எழுந்த சர்ச்சை.
பிரபல சமூகவலைத்தினை பயன்படுத்த பணம் செலுத்த வேண்டும் – X தளத்தின் புதிய அறிவிப்பால் எழுந்த சர்ச்சை.
எப்போதுமே X தளத்தில் அதாவது பரவலாக டுவிட்டர் எனும் அறியப்படும் சமூக வலைத்தளத்தில் பரபரப்பிற்கு என்றுமே பஞ்சம் இருக்காது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். இன்று ஒரு சர்ச்சையான செய்தியினை வெளியிட்டு இருக்கின்றார்கள்.
நீங்கள் டுவிட்டர் பயனாளராக இருந்தால் இனிவரும் காலங்களில் வருடத்திற்கு ஒரு $1 செலுத்துவதன் மூலம் மட்டுமே டுவிட்டர் தளத்தின் அடிப்படையான மற்றும் முக்கியமான வசதிகளான Tweet, Retweet, Reply,Likes போன்றவற்றை பயன்படுத்த முடியாது என்று சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்.
X தளத்தின் அடுத்த புதிய update அப்படியாக தான் இருக்கப்போகின்றது. இப்போது பிலிப்பைன்ஸ் மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகளில் பரீட்சார்த்தமாக அமுல்படுத்தப்போவதாக அறிவித்து இருக்கின்றார். டுவிட்டர் தளத்தில் போலியான கணக்குகள், ஏமாற்றுக்காறர்கள், bots என்பவற்றை கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவித்து இருக்கின்றார்கள். பயனர்கள் தங்களுடைய தொலைபேசி இலக்கத்தை கொடுத்து உறுதிப்படுத்துவன் மூலமும் $1 இனை செலுத்துவன் மூலம் ஒரு வருடத்திற்கான டுவிட்டர் தளத்தின் அடிப்படை வசதிகளை பயன்படுத்த முடியும். தொலைபேசி இலக்கம் மற்றும் $1 செலுத்தாத கணக்குகள் வெறுமனே பார்வையாளர்களாக மட்டுமே இருக்க முடியும். இதன் மூலம் தேவையற்ற போலியான கணக்குகள் மற்றும் போலியான தகவல்கள் பரிமாறப்படுவதை தவிர்க்க முடியும் என்றும் X தரப்பில் இருந்து வெளியிட்டு இருக்கின்றார்கள்