தொழில்நுட்பம்

Microsoft Paints இல் வெளியான புதிய அம்சம்…!!!

Published

on

Microsoft Paints இல் வெளியான புதிய அம்சம்…!!!

Windows 11 இயங்குதளத்தில் Paint செயலியில் புதிய வசதியினை Microsoft நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கின்றது. சிறிய அளவிலான எடிட்டிங் வேலைகளுக்கு பயன்படும் Windows இயங்குதளங்களுடன் வெளிவரும் Paint செயலியில் புதிய வசதி ஒன்றினை அறிமுகப்படுத்தியருக்கின்றார்கள்.

இனி Microsoft Paints இனைப்பயன்படுத்துவதன் மூலம் Photos இன் Background இனை நீக்கம் செய்ய முடியும். அதுவும் மிக இலகுவாக நீக்கம் செய்ய முடியும். Windows 11 Paints செயலியிற்கு சென்று உங்களுக்கு தேவையான புகைப்படத்தினை உள்ளீடு செய்த பின்னர் நீக்கம் செய்யப்படவேண்டிய பகுதியினை தெரிவு செய்ய வேண்டும் அதற்கு பின்னர் Image section இல் காணப்படும் Remove Background என்பதை தெரிவு செய்வதன் ஊடாக மிக இலகுவாக background இனை நீக்க முடியும்.

நீங்கள் Windows 11 இயங்குதளத்தில் Paints இனைப்பயன்படுத்துபவராக இருந்தால் இந்த புதிய வசதியினை பயன்படுத்துவதன் மூலமாக மிகவும் இலகுவாக photos இன் background இனை நீக்கம் செய்துகொள்ள முடியும்.

Exit mobile version