2020 ஆண்டு வாக்கில் ஐபோன் 12 வெளியீட்டில் இருந்து ஐபோன்களுடன் சார்ஜர் வழங்குவதை ஆப்பிள் நிறுத்திவிட்டது.
இதற்கு எதிராக பிரேசில் நாட்டில் ஆப்பிள் நிறுவனத்திற்கு வழக்கு நடைபெற்று வந்த நிலையில், தற்போது வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஐபோன்களுடன் சார்ஜர் வழங்காமல் விற்பனை செய்த விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனத்திற்கு பிரேசில் நாட்டு நித்ததுறை சார்பில் 2.34 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
கடந்த மாதம் இந்த சம்பவம் அரங்கேறிய நிலையில், சார்ஜர்கள் இன்றி ஐபோன் விற்பனையை நடத்தக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதன்படி தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி பிரேசில் நாட்டின் சௌ பௌலோ நீதிமன்றம் ஆப்பிள் நிறுவனத்திற்கு 100 மில்லியன் ரியாக்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,56,59,47,700 அபராதம் விதித்துள்ளது.
மேலும் பிரேசில் நாட்டில் விற்பனை செய்யப்படும் ஐபோன்களுடன் கட்டாயம் சார்ஜர் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறது.
#Iphone #Brazil
Leave a comment