தொழில்நுட்பம்

அசத்தலான சிறப்பம்சங்களுடன் அறிமுகமான ஒப்போ F21s ப்ரோ சீரிஸ் !

Published

on

ஒப்போ நிறுவனம் புதிய F21s ப்ரோ சீரிசில் F21s ப்ரோ மற்றும் F21s ப்ரோ 5ஜி மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.

இரு மாடல்களிலும் ஒரே மாதிரியான அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், இவை டான்லைட் கோல்டு மற்றும் ஸ்டார்லைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

ஒப்போ F21s ப்ரோ மற்றும் F21s ப்ரோ 5ஜி மாடல்கள் டான்லைட் கோல்டு மற்றும் ஸ்டார்லைட் பிளாக் நிறங்களில் கிடைக்கின்றன.

இவற்றின் விலை முறையே ரூ. 22 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 25 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இரு ஸ்மார்ட்போன்களும் ஒப்போ ஸ்டோர், அமேசான் மற்றும் முன்னணி சில்லறை விற்பனை மையங்களில் செப்டம்பர் 19ஆம் தேதி கிடைக்கிறது.

ஒப்போ F21s ப்ரோ அம்சங்கள்:

  • 6.43 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ 90Hz AMOLED டிஸ்ப்ளே
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
  • ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்
  • அட்ரினோ 610 GPU
  • 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி UFS 2.2 மெமரி
  • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • ஆண்ட்ராய்டு 12 மற்றும் கலர் ஒஎஸ் 12.1
  • டூயல் சிம் ஸ்லாட்
  • 64MP பிரைமரி கேமரா
  • 2MP மைக்ரோஸ்கோப் கேமரா
  • 32MP செல்பி கேமரா
  • இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
  • 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
  • டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
  • யுஎஸ்பி டைப் சி
  • 4500 எம்ஏஹெச் பேட்டரி
  • 33 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங்

ஒப்போ F21s ப்ரோ 5ஜி அம்சங்கள்:

  • 6.43 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ 60Hz AMOLED டிஸ்ப்ளே
  • ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்
  • அட்ரினோ 619 GPU
  • 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி UFS 2.2 மெமரி
  • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • ஆண்ட்ராய்டு 11 மற்றும் கலர் ஒஎஸ் 12
  • ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
  • 64MP பிரைமரி கேமரா
  • 2MP மோனோக்ரோம் கேமரா
  • 2MP மேக்ரோ கேமரா
  • 16MP செல்பி கேமரா
  • இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
  • 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
  • 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
  • யுஎஸ்பி டைப் சி
  • 4500 எம்ஏஹெச் பேட்டரி
  • 33 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங்

#Oppo #Technology

 

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version