சமூக வலைத்தளங்கள் முடக்கம் – பயனர்கள் அவதி .

s.media

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, உலகளாவிய ரீதியில் முகநூல் சமூக வலைத்தளம் இவ்வாறு முகநூல் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் தளத்தின் டெஸ்க்டொப் பதிப்பே இந்தச் சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கணினிகளின் ஊடாக முகநூல் சமூக வலைத்தளத்தை பார்வையிட முடியவில்லை. எனினும், ஒரு சில தொலைபேசிகளில் முகநூல் சமூக வலைத்தளம் இயங்குகிறது.

பயனர்கள் உள்நுழைய முயன்றபோது, “தளச் சிக்கல் காரணமாக உங்கள் கணக்கு தற்போது கிடைக்கவில்லை. இது விரைவில் சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். தயவுசெய்து சில நிமிடங்களில் மீண்டும் முயற்சிக்கவும்” என்ற அறிவிப்பு காண்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இன்று முற்பகல் 9.00 மணியளவில் “Facebook Down” தொடர்பான முறைப்பாடுகள் திடீரென அதிகரித்துள்ளதாக சேவை முடக்கங்களைக் கண்காணிக்கும் DownDetector இணையத்தளம் தெரிவித்துள்ளது.

Exit mobile version