nasa 621411 1920 1643196804863 1645869212447
விஞ்ஞானம்

பூமியை நோக்கி வந்த விண்கல்! வெற்றிகரமாக திசை திருப்பப்பட்டது

Share

பூமியை சுற்றி வரும் சிறுகோள், விண்கற்கள் பூமி மீது மோத வாய்ப்பு இருக்கிறதா? என்று விஞ்ஞானிகள் கண்காணித்து வருகிறார்கள்.

இதில் அமெரிக்க விண்வெளி கழகமான நாசாவின் விஞ்ஞானிகள் அமைப்பு ஒன்றை நிறுவி ஆய்வு செய்து வந்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு ‘டார்ட்’ என்ற விண்கலத்தை விண் வெளிக்கு அனுப்பியது. இந்த விண்கலம், பூமியை நோக்கி டிடிமோஸ் பைனரி என்ற விண்கல் வருவதையும், அதனால் பூமிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதையும் கண்டுபிடித்தது.

டிடிமோஸ் பைனரி விண்கல், பூமி மீது மோது வதை தடுத்து அதை திசை திருப்ப நாசா முடிவு செய்தது. அதன்படி அந்த விண்கல் மீது டார்ட் விண்கலத்தை கடந்த மாதம் 26-திகதி நாசா மோத வைத்தது.

விண்கலம் வெற்றிகரமாக விண்கல் மீது மோதியதால் அதன் திசையில் விரைவில் மாற்றம் ஏற்படும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.

வெற்றிகரமாக இந்த விண்கல் திசை திருப்பப்பட்டதாக நாசா அறிவித்துள்ளது.

11 மணி 55 நிமிடமாக இருந்த விண்கல்லின் சுற்றுப்பாதையானது விண்கலம் மோதலுக்கு பிறகு 11 மணி 23 நிமிடங்களாக குறைந்துள்ளது. இதன் மூலம் விண்கல்லின் சுற்றுப் பாதையானது 32 நிமிடங்கள் வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.

இதனால் விண்கல்லால் ஏற்பட இருந்த ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

#Science #Nasa

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
e80bd285f6c1bd940c53fb55c72b47d0
விஞ்ஞானம்கட்டுரை

2026-ஐ வரவேற்கும் ஓநாய் சூப்பர் மூன்: ஜனவரி 3-ல் வானில் நிகழும் அதீத பிரகாசம்!

பிறக்கவிருக்கும் 2026 ஆம் ஆண்டு, ஒரு கண்கவர் வானியல் நிகழ்வுடன் தொடங்கவுள்ளது. வழக்கமான பௌர்ணமி நிலவை...

download 17 1 3
உலகம்செய்திகள்விஞ்ஞானம்

நாளை அபூர்வமான முழு சூரிய கிரகணம்!

நாளை அபூர்வமான முழு சூரிய கிரகணம்! 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது....

tech
உலகம்செய்திகள்தொழில்நுட்பம்விஞ்ஞானம்

செவ்வாய் கிரகத்திற்கு செல்ல பயிற்சி எடுக்கும் நால்வர்!

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் பணியில் அமெரிக்க விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். செவ்வாய் கிரகத்திற்கு...