தற்போது பூமியில் இருந்து 7100 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள பபுள் நெபுலாவின் புகைப்படத்தினை நாசா வெளியிட்டுள்ளது.
நாசாவின் ஹப்பின் தொலைநோக்கி புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.
விண்மீன்கள் கூட்டத்துக்குள் உள்ள அந்த ‘பபுள் நெபுலா’ கண் கவரும் வகையில் மிகவும் வண்ணமயமாக காணப்படுகிறது.
இந்த பபுள் நெபுலா மற்ற நெபுலாக்களை விட மிகவும் பிரபலமானது. இது 40 லட்சம் ஆண்டுகள் பழமையானது. இது இன்னும் 1 முதல் 2 கோடி ஆண்டுகளுக்குள் ‘சூப்பர் நோவா’ வாக மாறிவிடும் என்று நாசா தெரிவித்துள்ளது.
இந்த படத்தை வெளியிட்ட பிறகு நாசா கூறியதாவது: இந்த பபுள் நெபுலா தெளிவாக பார்க்கும் வகையில் உள்ளது. பச்சை நிறத்தில் ஹைட்ரஜன், நீல நிறத்தில் ஆக்சிஜன், சிவப்பு நிறத்தில் நைட்ரஜன் கலந்து வண்ண மயமாக காணப்படுகிறது என்று நாசா தெரிவித்துள்ளது.
#Science #Nasa
Leave a comment