மிரளவைக்கும் நிலவு – புகைப்படத்தை வெளியிட்டது நாஸா

Moon Pic NASA

மிரளவைக்கும் நிலவு – புகைப்படத்தை வெளியிட்டது நாஸா

விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் நிலவின் புகைப்படம் அதிக லைக்குகளை குவித்து வருகிறது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா பூமி, செவ்வாய்க் கிரகம், நெபுலா மேக கூட்டங்கள் என அற்புதமான புகைப்படங்களால் தன் சமூக வலைத்தள பக்கங்களை அலங்கரித்து வருகிறது. இந்நிலையில் நிலவின் புகைப்படத்தை நாஸா தற்போது வெளியிட்டுள்ளது.

3 புகைப்படங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டிருக்கும் நிலவின் புகைப்படத்துக்கு “false-colour mosaic” என நாஸா பெயரிட்டுள்ளது. வியாழன் கிரகத்தை நோக்கிய பயணத்தின் போது கலீலியோ விண்கலத்தால் படம்பிடிக்கப்பட்டுள்ள இந்த புகைப்படங்கள் டிசம்பர் 7, 1992 ஆம் ஆண்டு நிலவின் வடக்கு பகுதிகளில் எடுக்கப்பட்டவை. இந்த புகைப்படங்கள் நாஸாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், லைக்குகளையும் குவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version