மாம்பழம் இரவு நேரத்தில் சாப்பிடுவது ஆபத்தா?

பொதுவாக நம்மில் பலர் நேரம் காலம் பார்க்காமல் மாம்பழம் சாப்பிடுவதுண்டு.

அதிலும் பலர் இரவு நேரத்தில் மாம்பழம் சாப்பிடுவதுண்டு. உண்மையில் மாம்பழத்தை இரவு நேரங்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

ஏனெனில் இரவு நேரத்தில் செரிமான மண்டலம் பலவீனமாக இருக்கும். அந்த சமயத்தில் எளிதில் ஜீரணமாகும் உணவுகளைத்தான் சாப்பிட வேண்டும்.

ஆனால் மாம்பழம் செரிமானம் ஆக நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் வயிற்று உப்புசம் உண்டாகும். சில சமயங்களில் வயிற்று போக்கு, வாந்தி ஏற்படக்கூடும்.

உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் மாம்பழம் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இரவில் தினமும் மாம்பழம் உட்கொண்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

குறிப்பாக சர்க்கரை நோயாளிகளும் மாம்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

4400209000000578 4861518 image a 24 1504784708478

#LifeStyle

 

 

Exit mobile version