விண்வெளியானது பல ரகசியங்களையும் ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் கொண்டது. அதன் அழகே தனியழகு.
அந்த வகையில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அண்மையில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
இந்தப் புகைப்படமானது விண்வெளியின் ஆழமான இருள் பின்னணியில் தங்க நிறத்தில் கைபோன்ற ஒரு பெரிய வடிவத்தில் காணப்படுகிறது. இந்த வடிவம் கடவுளின் கை HAND OF GOD என்று பலரும் கூறி வருகின்றனர்.
இந்த வடிவம் அதிக ஆற்றலும் நுண்ணிய துகள்களும் கொண்ட நெபுலா என்று விஞ்ஞானிகள் கணிக்கின்றனர்.
அதாவது ஒரு நட்சத்திரம் வெடித்து உருவாகுகையில் அதனால் விட்டு செல்லப்படும் பல்சாரிலிருந்து புறப்படுவது இப்படியான வடிவம் எனக் கூறப்படுகிறது.
இந்த பல்சர் 19 கிலோமீற்றர் பரப்பளவு உடையது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது பூமியிலிருந்து 17 ஆயிரம் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது எனவும் தெரிவி்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நெட்டிசன்கள் இது சிவனின் 3ஆவது நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய நெருப்பு. அவர் காது வளையம் போட்டிருக்கிறார். இது இறைவனின் கை என அந்தப் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.