பொங்கல் என்பது தமிழர்களின் பாரம்பரிய அறுவடை திருநாள். இந்த பொங்கல் விழா நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தின் கடைசி நாள் (ஜனவரி 13) போகி பொங்கல் கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல் நாள் (ஜனவரி 14) சூரிய பொங்கல், இரண்டாம் நாள் (ஜனவரி 15) மாட்டு பொங்கல் மற்றும் மூன்றாம் நாள் காணும் பொங்கல் (ஜனவரி 16) கொண்டாடப்படுகிறது.
தை 1 அன்று பொங்கல் வைக்க நல்ல நேரம்
காலை 9.30 முதல் 10.30 வரை
மாலை 4.30 முதல் 5.30 வரை
ராகு – காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் – மதியம் 3 முதல் 4,30 வரை
ராகு மற்றும் எமகண்ட நேரத்தில் பொங்கல் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
மாட்டு பொங்கல் வைக்க உகந்த நேரம்
காலை 7.30 முதல் 8.30 வரை
மாலை 4.30 முதல் 5.30 வரை