tamilni 207 scaled
இலங்கைசெய்திகள்

தமிழ்த் தேசிய கட்சிகளின் கூட்டமைப்பு கோரிக்கை

Share

தமிழ்த் தேசிய கட்சிகளின் கூட்டமைப்பு கோரிக்கை

எதிர்வரும் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள கதவடைப்பு போராட்டத்திற்கு வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்புக்களும் ஒத்துழைப்பை வழங்குமாறு தமிழ்த் தேசிய கட்சிகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வவுனியா வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் காரியாலத்தில் (16.10.2023) இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேலும் கருத்து தெரிவித்த கட்சிகளின் பிரதிநிதிகள் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு நீதி சரவணராஜா மீதான அச்சுறுத்தலின் மூலம் நீதித்துறை சுயாதீனமாக செயல்பட முடியாத நிலமை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் தமிழர் பிரச்சனைக்கு உள்நாட்டில் நீதியை காண முடியாது என்று நாம் வலியுறுத்திய விடயத்திற்கு இந்த சம்பவம் சிறந்த எடுத்துகாட்டாகவும் அமைந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் தமிழ்மக்களின் கவனத்தை திசைதிருப்பும் செயற்பாட்டை இந்த அரசாங்கமும், ஜனாதிபதியும் முன்னெடுத்து வருகின்றனர்.

எனவே இந்த அரசியல் சூழ்நிலையில் ஜனாதிபதியின் ஒவ்வொரு அரசியல் நகர்வுகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து எதிர்காலத்தில் எப்படி செயற்ப்படவேண்டும் என்ற காத்திரமான முடிவை எடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு தமிழ் மக்களும் தமிழ்த்தேசிய கட்சிகளும் தள்ளப்பட்டுள்ளது.

எனவே எதிர்வரும் வெள்ளிக்கிழமை வட கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள கதவடைப்பு போராட்டத்திற்கு பொதுமக்கள் வர்த்தக சங்கத்தினர், பேருந்து உரிமையாளர் சங்கம், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் உட்பட அனைத்து பொது அமைப்புக்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.

குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ்மக்கள் விடுதலைக்கழகம் சார்பில் சந்திரகுலசிங்கம் மோகன், தமிழரசுக்கட்சி சார்பில் ந.கருணாநிதி, ஜனநாயக போராளிகள் கட்சி சார்பில் க.துளசி உட்பட பலர் கொண்டிருந்தனர்.

Share
தொடர்புடையது
Government Unveils Plans to Boost Domestic Aviation in Support of Tourism
இலங்கைசெய்திகள்

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க உள்நாட்டு விமான சேவைகள் விரிவாக்கம்: அமைச்சர் அனுர கருணாதிலக்க உறுதி!

இலங்கையின் சுற்றுலாத்துறையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், உள்நாட்டு வானூர்தி போக்குவரத்து வலையமைப்பை வலுப்படுத்துவதற்கான புதிய...

94745991
செய்திகள்உலகம்

சிரியாவில் அமெரிக்காவின் ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்ட்ரைக்: ஐஎஸ் இலக்குகள் மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்!

சிரியாவில் நிலைகொண்டுள்ள ஐஎஸ் (IS) பயங்கரவாத அமைப்பினரை இலக்கு வைத்து, அமெரிக்கப் படைகள் மற்றும் அதன்...

default
உலகம்செய்திகள்

ஈரானில் 14-வது நாளாகத் தொடரும் போராட்டம்: 116 பேர் உயிரிழப்பு; போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை எச்சரிக்கை!

ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராகத் தொடங்கிய மக்கள் போராட்டம்,...

1185212 anbu
செய்திகள்இலங்கை

யாருடன் கூட்டணி? – ராமதாஸ் இன்று சென்னை வருகை; நாளை வெளியாகிறது அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) கூட்டணி நிலைப்பாடு...