9 4 scaled
சினிமாசெய்திகள்

முதல் முறையாக லியோ பற்றி வாய்திறந்த சூப்பர் ஸ்டார்… அதிர்ச்சியில் ரசிகர்கள்

Share

முதல் முறையாக லியோ பற்றி வாய்திறந்த சூப்பர் ஸ்டார்… அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகர் ரஜனிகாந்த ஊடகவியலாளர்களுக்கு நடிகர் விஜய் அவர்களின் லியோ படம் குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா வாழ்க்கையின் மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் எல்லாம் போட்டியிட்டு இருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே ரஜினிக்கு போட்டியாக விஜய் இருப்பதாக சொல்லி வருகிறார்கள். இதைப் பற்றி அவர்கள் இருவருமே வாயைத் திறந்து எந்த கருத்தும் சொல்லியது கிடையாது.

ரஜினியின் சமீபத்திய ரிலீஸ் ஆன ஜெயிலர் படம் பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட ரஜினி பேசியது எல்லாமே விஜய்க்கு பதிலடி தான் என கிளப்பி விடப்பட்டது. அதிலும் ஜெயிலர் படம் கிட்டத்தட்ட 600 கோடி வசூல் செய்து விட்டதால் அடுத்த விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் லியோ படம் ஆயிரம் கோடியை தொட்டுவிட வேண்டும் என விஜய் ரசிகர்கள் சபதமிட்டு கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் ரஜனிகாந்த் முதல்முறையாக லியோ படம் பற்றி வாயைத் திறந்து பேசி இருக்கிறார்.

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் தற்போது ரஜினி தன்னுடைய 170 ஆவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வள்ளியூர் மற்றும் பண குடி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு சமயத்தில் அவ்வப்போது ரஜினி பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகிறார்.

அப்படி ஒரு சந்திப்பில் இன்று ரஜினியிடம் லியோ படம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரஜினி, “விஜய் நடித்த லியோ படம் வெற்றி அடைய வேண்டும் என ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்” என்று சொல்லி இருக்கிறார். ரஜினியின் இந்த பதில் எல்லோரையுமே ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. பெரிய மனிதன் எப்போதுமே பெரிய மனிதன் தான் என மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டார் ரஜினிகாந்த்.

ரஜினி ரசிகர்கள் ஒரு பக்கம் எங்களுடைய தலைவரை வைத்து லியோவிற்கு விளம்பரம் தேடுகிறீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள். அதற்கு விஜய் ரசிகர்கள் பதிலுக்கு லியோ, லோகேஷ் கனகராஜ் படம் என்பதால் தான் ரஜினி இப்படி சொல்லி இருக்கிறார். இந்த படம் ஜெயித்தால் தான் தலைவர் 171 படத்தின் மீது ஹைப் இருக்கும் என்பதால் தான் ரஜினி இப்படி சொல்லி இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ரஜனி மற்றும் விஜய் இடையில் உள்ளே போட்டி இருக்கிறதா என்று கேட்டால் தெரியவில்லை என்றுத்தான் கூறலாம் ஆனால் ரசிகர்களிடத்தில் பலத்த சண்டையே நடைபெறுகிறது. இறுதியில் அந்த காக்கை , கழுகு கதைக்கு முடிவு வந்தால்தான் ரசிகர்கள் சண்டையும் குறையும்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...