tamilni 185 scaled
இலங்கைசெய்திகள்

யாழ்.மக்களுக்காக அங்கஜன் கோரிக்கை

Share

யாழ்.மக்களுக்காக அங்கஜன் கோரிக்கை

யாழ்ப்பாணம் விமானநிலையம், துறைமுகங்கள் ஊடாக விவசாய உற்பத்திகளின் ஏற்றுமதிக்கு ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டும் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட விவசாய குழு கூட்டம் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது. சந்தை வாய்ப்பு இதில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,”எமது விவசாயிகளின் உற்பத்திகளுக்கான ஏற்றுமதி வாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உற்பத்திகளுக்கான பெறுமதி சேர்க்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது.

உள்ளூர் ஏற்றுமதி சந்தைகளை தாண்டி ஐரோப்பா உள்ளிட்ட சர்வதேச சந்தைகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புகளை பெற்றுத்தர வேண்டும். தற்போது, இந்தியாவுடனான கடல் மற்றும் வான் வழி தொடர்புகளை யாழ்.மாவட்டம் கொண்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்திய சந்தை வாய்ப்புகளை எமது உற்பத்திகளுக்கு ஏற்படுத்தி கொடுக்க முடியும்.

ஆகவே கடந்த காலங்களில் எமது விவசாயத்துறைக்கு மேற்கொண்ட உதவிகள் போன்று தற்போதைய இந்த வாய்ப்புகளை பயன்படுத்தவும் உதவிகளை செய்ய வேண்டும் குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளின் உருளைக்கிழங்கு அறுவடைகளில் அதிகப்படியான அடைவுமட்டம்(target achieve) 2019ம் ஆண்டில் பதிவாகியுள்ளது.

எனவே எமது விவசாயிகளுக்கு உள்ளூர் விதை உருளைக் கிழங்குகளை பெற்று வழங்குவதற்கு அமைச்சர் உதவி செய்ய வேண்டும்.”என கோரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...

02 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை: ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு,...

01 16
செய்திகள்உலகம்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு என தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400...

21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...