லியோ நாயகி திரிஷாவின் தி ரோட் திரைப்படம் செய்த வசூல்!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை திரிஷா. இவர் நடிப்பில் இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் தி ரோட் திரைப்படம் கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தில் ஷபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி, லக்ஷ்மிப்ரியா எனப் பிரபலங்கள் நடித்துள்ளனர்.
தற்போது தி ரோட் படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 6 நாட்களில் தி ரோட் படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.4.53 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.