இலங்கை
மருத்துவத்துறையின் அபார வளர்ச்சி: புதிய சாதனை
மருத்துவத்துறையின் அபார வளர்ச்சி: புதிய சாதனை
மருத்துவத்துறையின் அபார வளர்ச்சியினால் மூளையின் ஒரு பக்க செயலாக்கத்தை மட்டும் நிறுத்தும் முயற்சியில் அமெரிக்கா சாதனை படைத்துள்ளது.
அந்த வகையில் அமெரிக்காவில் சிறுமி ஒருவருக்கு மூளையின் ஒரு பக்கத்தை செயலிழக்க செய்யும் சத்திர சிகிச்சை வெற்றியளித்துள்ளது.
அமெரிக்காவில் வசித்து வரும் 6 வயதான பிரையன்னா பாட்லி என்ற சிறுமிக்கு திடீரென உடல் நலம் குறைவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சிறுமி கலிபோர்னியாவில் உள்ள லோமா லிண்டா (Loma Linda) பல்கலைக்கழக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையில் “ராஸ்முஸ்ஸென்ஸ் என்சஃபலைட்டிஸ்” (Rasmussen’s Encephalitis) எனும் அரிய வகை மூளை அழற்சி நோய் கண்டரியப்பட்டுள்ளதுடன் சிறுமியின் மூளையின் ஒரு பாகம் சுருங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது.
இதன் போது வைத்தியர்கள் இந்த அரிய வகையான நோய்க்கு ஒரு பக்க மூளையின் செயலாக்கத்தை நிறுத்துவதே தீர்வு என கண்டுப்பிடித்துள்ளனர்.
இதற்கமைய வைத்தியர்கள் மேற்கொண்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதுடன் சிறுமியும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இதற்கான தீர்வு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இந்த சாதனை மருத்துவ உலகின் முன்னேற்றமாக பார்க்கப்படுகின்றது.