Bigboss season 5 - வெளியாகிறது புரொமோ!
உலகம்செய்திகள்

இவருக்கு தான் ஓட்டு போடப் போறீங்களா? கமலை வம்புக்கிழுத்த ப்ளூ சட்டை மாறன்

Share

இவருக்கு தான் ஓட்டு போடப் போறீங்களா? கமலை வம்புக்கிழுத்த ப்ளூ சட்டை மாறன்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் பிரபலம் தான் கமல்ஹாசன்.இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர் நடிப்பைத் தாண்டி அரசியலிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்.இவரது நடிப்பில் தற்பொழுது இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகின்றது.

மேலும் சினிமா பிரபலங்கள் குறித்து விமர்சனங்களைத் தெரிவித்து வருபவர் தான் ப்ளூ சட்டை மாறன் .ஜெயிலர் படத்தின் ரிலீஸின் போது ரஜினிகாந்தை விமர்சித்து வந்தார். தொடர்ந்து லியோ படத்தில் ஏற்பட்டு வரும் குளறுபடிகளை பட்டியல் போட்டு விமர்சித்து வருகின்றார்.இந்நிலையில், தற்போது கமலை விமர்சித்துள்ளார்.

அதில் கமலுக்கா ஓட்டுப் போட போறீங்க என்கிற கேள்வியை முன் வைத்து “கமலின் அரசியல் தசாவதாரம். இவருக்கா வரும் தேர்தலில் வாக்களிக்க போகிறீர்கள்?” என்கிற ட்வீட்டை தற்போது போட்டுள்ளார். மேலும், அதற்கு கீழ் அவர் பதிவிட்டுள்ள வீடியோ தான் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.

பழைய வீடியோவில் கமல்ஹாசன் ஸ்டாலினை கிண்டல் செய்து பேசும் காட்சிகளும், தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்து பேசும் வீடியோ காட்சிகளையும் கமல் பற்றிய கேள்வியை ஸ்டாலினிடம் முன் வைக்க நான் அரசியல் பற்றி பேசுகிறேன் கமல் ஒரு சினிமாக்காரர் என ஸ்டாலின் நக்கலடித்த வீடியோ காட்சிகளையும் ஒன்றாக இணைத்துப் போட்டு தனது அடுத்த வேலையை ஆரம்பித்துள்ளார்.

கமலின் அரசியல் தசாவதாரம். இவருக்கா வரும் தேர்தலில் வாக்களிக்க போகிறீர்கள்? அவரது டுவிட்டைப் பார்த்த கமல் ரசிகர்கள் லியோ படத்தில் வருவதை விட மோசமான கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்து வருகின்றனர். மேலும், நீங்க அரசியல் பக்கம் புதுசோ, அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் ப்ளூ சட்டை என்றும் விளக்கம் கொடுத்து வருகின்றனர்.

 

Share
தொடர்புடையது
MediaFile 1 1
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த பெண் விளக்கமறியலில்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்குத் தங்குமிட வசதிகளை...

25 68f4c824ac515
செய்திகள்இலங்கை

ராகம, படுவத்தை பேருந்து விபத்து: 9 மாணவர்கள் உட்பட 12 பேர் காயம்!

ராகம, படுவத்தை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒன்பது மாணவர்கள் உட்பட மொத்தம் 12 பேர்...

Landslide Warning 1200px 22 12 25 1000x600 1
செய்திகள்இலங்கை

இலங்கையில் மழை மேலும் அதிகரிக்கும்: 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

எதிர்வரும் அக்டோபர் 21ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கையில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல்...

25 68efb833da4d2
செய்திகள்இலங்கை

காவல்துறை அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பு: விசாரிக்க விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரங்கள்

தேசிய காவல்துறை திணைக்களத்தில் உயர் பதவி முதல் பல்வேறு பதவிகளில் உள்ள அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்...