0 JS313351750
உலகம்செய்திகள்

போர் பிரகடனம் செய்த இஸ்ரேல்… நிறைவேறிய இன்னொரு நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு

Share

போர் பிரகடனம் செய்த இஸ்ரேல்… நிறைவேறிய இன்னொரு நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு

ஹமாஸ் படைகளின் தாக்குதலை அடுத்து இஸ்ரேல் போர் பிரகடனம் அறிவித்த நிலையில் பிரெஞ்சு தத்துவஞானி நோஸ்ட்ராடாமஸின் திகைக்க வைக்கும் கணிப்பு ஒன்று நிறைவேறியுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

பிரெஞ்சு தத்துவஞானி நோஸ்ட்ராடாமஸ் கடந்த 100 ஆண்டுகளில் நடந்த பல சம்பவங்களை கணித்துள்ளதுடன், அவை நிறைவேறியும் உள்ளது. இந்த நிலையில், 2023ல் ஒரு பெரும் போர் மூளும் அபாயம் குறித்து நோஸ்ட்ராடாமஸ் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஹிட்லர் தொடங்கி, கென்னடி படுகொலை மட்டுமின்றி, 2022ல் விலைவாசி உயர்வால் உலக மக்கள் படும் அவதிகளும் நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார். சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்னர் நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ள பல சம்பவங்கள் நிறைவேறியுள்ளது.

தற்போது இஸ்ரேல் போர் பிரகடனம் தொடர்பிலும் நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார். அதாவது, 7 மாதங்கள் நீடிக்கும் பெரும் போர், தீய செயல்களால் மக்கள் இறப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

தொடக்கத்தில் இது உக்ரைன் மீதான ரஷ்யாவின் அத்துமீறல் தொடர்பான கணிப்பு என்றே நம்பப்பட்டது. ஆனால் தற்போது ஹமாஸ் படைகள் இஸ்ரேல் மீது தொடுத்த தாக்குதலும், அதற்கு பதிலடியாக இஸ்ரேல் அறிவித்துள்ள போர் பிரகடனமும் நோஸ்ட்ராடாமஸ் கணிப்பை உறுதி செய்வதாக கூறுகின்றனர்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தமது சமூக ஊடக பக்கத்தில் போர் பிரகடனம் குறித்து பதிவு செய்துள்ளார். ஏருசலேம் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் அனைத்திலும் எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டுள்ளது.

யூதர்களின் மத ரீதியான விடுமுறைகளின் கடைசி நாளில் ஹமாஸ் அமைப்பு அதிரடி தாக்குதலை முன்னெடுத்துள்ளது. ஹமாஸ் இலக்கு வைத்துள்ளதாக கூறப்படும் இஸ்ரேலின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்திற்காக போராடும் ஹமாஸ் அமைப்பினை இஸ்ரேல் உள்ளிட்ட பிரித்தானியா, கனடா, அமெரிக்கா மற்றும் பல எண்ணிக்கையிலான நாடுகள் தீவிரவாத குழு என்றே அடையாளப்படுத்தி வருகிறது.

ஆனால் 1946ல் வெளியான பாஸ்தீன வரைப்படமும், தற்போதைய வரைப்படமும் ஒப்பிட்டாலே இஸ்ரேல் முன்வைக்கும் அரசியல் புரியும் என அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...