இலங்கைசெய்திகள்

இடைக்கால தடை விதிக்க எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை

rtjy 95 scaled
Share

இடைக்கால தடை விதிக்க எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை

கடந்த 30வருடமாக இயங்கிய ஜனாதிபதியினால் அங்கீகரிக்கப்பட்ட பிரதேச செயலகத்தினை செயற்படவிடாமல் தடுக்கும் செயற்பாடுகளுக்கு இடைக்கால தடையினை விதிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பிலான வழக்கு நேற்று(06.10.2023) கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த போதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பில் நேற்று மிகவும் கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதோடு அதில் பல்வேறு விடயங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு தெளிவுபடுத்தப்பட்டன.

தனிப் பிரதேச செயலகமாக 1989ஆண்டு அங்கீகரிக்கப்பட்டு பிற்காலத்தில் அமைச்சரவை அனுமதியோடு 30வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் அரசியல் சூழ்ச்சியால் பறிக்கப்பட்டமை, வெளிப்படை அதிகாரங்கள் நிலை இல்லாமல் அரசியல் இனவாத சூழ்ச்சிக்குள் சிக்கி இருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசனால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.நேற்று இடம்பெற்ற வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி .எம் ஏ சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார்.

இந்த நிலையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப பிரதேச செயலகம் எனக் கூறி இடையீட்டு மனுதாரராக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மற்றும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கலீயூர் ரஹ்மான் ஆகியோரால் இடையீட்டு மனு இவ் வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபா,பைசர் முஸ்தபா ,சஞ்சீவ ஜயவர்தன ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

இந்த வழக்கின் இடையீட்டு மனுதாரர்களின் எழுத்து மூல சமர்ப்பணங்கள் கடந்த 3ம் திகதி முடிவடைந்த நிலையில் நேற்று 6 ஆம் திகதி வாய்மொழி சமர்ப்பணங்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில் அதற்கான சமர்ப்பணங்கள் சட்டமா அதிபர் சார்பிலும் இடையீட்டு மனுதாரர்களில் சார்பிலும் இடம்பெற்றுள்ளது.

இதில் இடையீட்டு மனுதார்கள் சார்பில் தோன்றிய ஜனாதிபதி சட்டத்தரணிகள் முறைப்படி கல்முனை பிரதேச செயலகத்தில்தான் ஆளுகை செய்யப்பட வேண்டும் என வாதங்களை முன்வைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து குறித்த வழக்கிற்கு ஆட்சேபனை சமர்ப்பணங்களை முன் வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி .எம் ஏ சுமந்திரன் பின்வருமாறு தனது ஆட்சேபனை வாதத்தை முன்வைத்துள்ளார்.

“கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஒரு பிரதேச செயலகமே அங்கு அதற்கு எவ்வித மறுப்பும் தெரிவிக்க முடியாது. வர்த்தமானி இல்லாவிடினும் இலங்கையில் பல்வேறு பிரதேச செயலகங்கள் இயங்குகின்றன.

குறிப்பாக வாழைச்சேனை,கோறளைபற்று மத்தி,நாவிதன்வெளி பிரதேச செயலகம், ஏறாவூர் என பலதை தொட்டு ஆட்சேபனையை தெரிவித்ததோடு தனியான பிரதேச செயலகமாக அங்கீகரிக்கப்பட்டு அமைச்சரவை தீர்மானமும் எடுத்து 30வருடங்களுக்கு மேல் கடந்து விட்டது.

நடைமுறையில் 30வருடங்களுக்கு மேலாக பிரதேச செயலகமாக இயங்கியதை 15க்கு மேற்பட்ட அமைச்சுக்கள் 50க்கு மேற்பட்ட திணைக்களங்கள் ஏற்றுக் கொண்ட விடயத்தினை ஏன் நாட்டின் ஜனாதிபதி தனிப் பிரதேச செயலகமாக பயன்படுத்தி வழங்கி உள்ளார்?

பிரதேச அபிவிருத்தி தலைவர்கள் நியமிக்கப்பட்டு தனியே பிரதேச அபிவிருத்தி குழு கூட்டமும் நடத்தப்பட்டது. இது முழுமையான பிரதேச செயலகமே இப்போது இதன் அதிகாரம் பறிக்கப்படுகின்றது.

இந்த நடவடிக்கை தடுக்கப்பட வேண்டும் எனவும் அதற்கான தடையுத்தரவுகளையும் வழங்க வேண்டும்.அதனை தொடர்ந்து சட்டபூர்வமான எதிர்பார்ப்பு கீழ் உடனடியாக அதிகாரங்கள் முழுமையாக பிரயோகிக்க செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளையாக்க வேண்டும்.” என தனது கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து வழக்கின் வாதப் பிரதிவாதங்களை கேட்ட நீதிமன்றம் தனது இடைக்கால தீர்வு தொடர்பான கட்டளை தொடர்பில் எதிர்வரும் (15.11.2023)அன்று வழங்குவதாக நேற்று(06.10.2023) அறிவித்துள்ளது.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...