rtjy 297 scaled
உலகம்செய்திகள்

அமெரிக்காவின் பிறப்புரிமை குடியுரிமையை எதிர்க்கும் விவேக் ராமசாமி

Share

அமெரிக்காவின் பிறப்புரிமை குடியுரிமையை எதிர்க்கும் விவேக் ராமசாமி

சட்ட விரோதமாக குடியேறிய பெற்றோர்களின் குழந்தைகள் இந்நாட்டில் பிறந்தால் அக்குழந்தைகளுக்கு வழங்கப்படும் “பர்த்ரைட் சிடிசன்ஷிப்” (birthright citizenship) பிறப்புரிமை குடியுரிமை முறையை நான் இரத்து செய்வேன் என விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சிமி வேலி பகுதியில் அமைய பெற்ற ரொனால்ட் ரீகன் நூலகம் மற்றும் அருங்காட்சியகத்தில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பும் அனைத்து வேட்பாளர்களும் தங்களது திட்டங்கள் குறித்து விளக்கி விவாதம் செய்யும் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த விவாதத்தில் அகதிகள் குடியுரிமை தொடர்பில் விவேக் ராமசாமி கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் ஜனாதிபதி பதவிக்கு தீவிரமாக போட்டியிடுகின்றனர்.

டொனால்ட் ட்ரம்ப் மீது பல மாநிலங்களில் வழக்குகள் உள்ளதால் அவர் பதவிக்கு வருவதில் சிக்கல் நீடிக்கிறது.

இதனால் அக்கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி தேர்தல் களத்தில் தீவிரமாக உள்ளார்.

இந்நிலையில் குறித்த விவாதத்தில் விவேக் ராமசாமி அகதிகள் குடியுரிமை தொடர்பில் கூறியதாவது,

சட்ட விரோதமாக இந்நாட்டில் குடியேறிய பெற்றோர்களின் குழந்தைகள் இந்நாட்டில் பிறந்தால் அக்குழந்தைகளுக்கு வழங்கப்படும் “பர்த்ரைட் சிடிசன்ஷிப்” (birthright citizenship) எனப்படும் பிறப்புரிமை குடியுரிமை முறையை நான் ரத்து செய்து விடுவேன்.

அரசியலமைப்பு சட்டத்தின் 14-வது திருத்தம் குறித்து எதிர்ப்பாளர்கள் வாதிடலாம். ஆனால், நான் அந்த திருத்தத்தை படித்திருக்கிறேன். அதன்படி நாட்டில் சட்ட விரோதமாக குடியேறி, அதன் பின்பு இங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவதை தடை செய்வது அரசியலமைப்பு சட்டப்படி சரியானதுதான்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
01 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: சுரேஷ் சலே கைது – இலங்கையின் பாதுகாப்பு வரலாற்றில் முக்கிய திருப்பம்!

2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான நீண்டகால விசாரணைகளின்...

30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...