tamilni 354 scaled
இலங்கைசெய்திகள்

மட்டகளப்பில் மனைவியை கொலை செய்ய முயற்சித்த கணவன்

Share

மட்டகளப்பில் மனைவியை கொலை செய்ய முயற்சித்த கணவன்

மட்டகளப்பு-வாழைச்சேனை ஓட்டுமாவடியில் தனது மனைவியின் கழுத்தையும் கையையும் வெட்டி கொலை செய்ய முயற்சியில் ஈடுபட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது 27.09.2023 மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குடும்ப தகராறு காரணமாக குறித்த நபர் மனைவியின் கழுத்து மற்றும் கையை கூரிய ஆயுதத்தால் வெட்டியபோது அவர் பலத்தகாயங்களுடன் தன்னை காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளார்.

இதனையடுத்து அயலவர்கள் குறித்த வீட்டை முற்றுகையிட்டு படுகாயமடைந்த பெண்னை காப்பாற்றி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததையடுத்து அவரை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றுப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மனைவியை வெட்டிய 57 வயதுடைய கணவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Share
தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

1763816381 road 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் மூடப்படுகிறது!

கொழும்பு – கண்டி பிரதான வீதி இன்று (நவம்பர் 26) இரவு 10 மணி முதல்...