உலகம்
ஜேர்மனியில் பெண்கள் உட்பட புகலிடக்கோரிக்கையாளர்கள் 5 பேர் கைது
ஜேர்மனியில் பெண்கள் உட்பட புகலிடக்கோரிக்கையாளர்கள் 5 பேர் கைது
ஜேர்மனிக்குள் புலம்பெயர்ந்தோர் கடத்தப்படுவதாக சந்தேகிக்கப்படும் விசாரணையின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையின்போது, நூற்றுக்கும் மேற்பட்ட சிரியா நாட்டவர்களை பொலிசார் கண்டுபிடித்தனர்.
அவர்களை நாட்டிற்குள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் தொடர்பில் பொலிசார் ரெய்டுகள் நடத்தினர்.
அதன் தொடர்ச்சியாக, 5 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார், அவர்கள் அனைவரும் சிரியர்கள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் என்று கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவர்.
ஜேர்மனிக்குள் சட்டவிரோதமாக நுழைவதற்காக அந்த புலம்பெயர்ந்தோர் கடத்தல்காரர்களுக்கு, ஆளுக்கு 3,000 முதல் 7,000 யூரோக்கள் வரை செலுத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் அந்த புலம்பெயர்ந்தோர் கொடுத்த பணத்தில் தங்கம் வாங்கியதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.