உலகம்செய்திகள்

கடும் பணியாளர் தட்டுப்பாடு: ஜேர்மன் நிறுவனம் எடுத்துள்ள முடிவு

Share
Share

கடும் பணியாளர் தட்டுப்பாடு: ஜேர்மன் நிறுவனம் எடுத்துள்ள முடிவு

பணியாளர் பற்றாக்குறை காரணமாக, ஜேர்மன் நிறுவனம் ஒன்று, பணி ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணிக்கு வரவழைத்துள்ளது.

உலக நாடுகள் பலவற்றில் பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது. பணி ஓய்வு பெறும் வயது வந்தவர்கள் ஓய்வு பெறுகிறார்கள்.

ஆனால், அவர்களுடைய இடத்தை நிரப்ப புதிதாக, தகுதியுடைய இளைஞர்கள் இல்லை.

ஜேர்மன் நிறுவனமான Lufthansa Technikக்கு டிசம்பர் மாதம் வாக்கில், சுமார் 2,000 திறன்மிகுப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

ஆனால், அந்த இடத்தை நிரப்ப ஆட்கள் இல்லை என்பதுடன், அப்படி புதிதாக பணிக்கு எடுப்பவர்களுக்கு சம்பந்தப்பட்ட பணிகளில் அனுபவமும் இல்லை.

ஆகவே, குறிப்பிட்ட அளவிலான பணியிடங்களையாவது நிரப்புவதற்காக, பணி ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணிக்கு அழைத்துள்ளது Lufthansa Technik நிறுவனம்.

விடயம் என்னவென்றால், இப்படி பணி ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணிக்கு அமர்த்துவதால், நிறுவனத்துக்கு அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் கிடைக்கும் அதே நேரத்தில், இப்படி ஓய்வு பெற்ற பின் பணிக்குத் திரும்புபவர்களுக்கு, ஓய்வூதியத்துடன் கூடுதல் வருவாயும் கிடைக்கிறது என்பதால், பணியாளர்களுக்கும் லாபம், நிறுவனத்துக்கும் லாபம் என்னும் நிலை காணப்படுகிறது.

ஆனால், எவ்வளவு காலத்துக்கு இதே நிலை நீடிக்கமுடியும் என்பது கேள்விக்குறிதான் என்பதையும் மறுப்பதற்கில்லை.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...