பங்களாதேஸிற்கு கடனை திருப்பி செலுத்திய இலங்கை
பங்களாதேஸிடம் பெற்றுக்கொண்ட 200 மில்லியன் டொலர் கடனை இலங்கை அரசாங்கம் திருப்பிச் செலுத்தியுள்ளது.
இந்த கடனுக்காக சுமார் 4.5 மில்லியன் டொலர் வட்டியாக செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவிய டொலர் தட்டுப்பாடு காரணமாக இலங்கை அரசாங்கம், பங்களாதேஸிடம் இரண்டாண்டுகளுக்கு முன்னதாக கடனைப் பெற்றுக்கொண்டது.
இறுதி தவணையில் இலங்கை அரசாங்கம் 50 மில்லியன் டொலர்களையும் 4.5 மில்லியன் வட்டியையும் சேர்த்து செலுத்தியுள்ளது.
ஓராண்டு கால தவணையில் கடன் பெற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் கடன் செலுத்துவதற்கான காலம் நீடிக்கப்பட்டிருந்தது.