4 25 1 scaled
உலகம்செய்திகள்

சுவிட்சர்லாந்தில் மருந்துகளின் பக்க விளைவுகளால் ஆண்டொன்றிற்கு 700 பேர் மரணம்: அதிரவைக்கும் தகவல்

Share

சுவிட்சர்லாந்தில் மருந்துகளின் பக்க விளைவுகளால் ஆண்டொன்றிற்கு 700 பேர் மரணம்: அதிரவைக்கும் தகவல்

சுவிட்சர்லாந்தில், 2012ஆம் ஆண்டுக்கும் 2019ஆம் ஆண்டுக்கும் இடையில், ஒவ்வொரு ஆண்டும், 32,000 பேர் மருந்துகளின் பக்க விளைவுகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

Lucerne மற்றும் Zurich பல்கலைக்கழகங்கள், Zurich பல்கலை மருத்துவமனை மற்றும் Swissmedic என்னும் அமைப்பு ஆகியவை இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டன.

அதிக அளவில், செரிமான மண்டலம் (இரைப்பை, குடல் அழற்சி), சிறுநீரக மண்டலம் (கடுமையான சிறுநீரக செயலிழப்பு) அல்லது மன /நடத்தை நிலை (ஓபியாய்டு சார்பு போன்றவை) போன்ற பக்க விளைவுகளே கண்டறியப்பட்டுள்ளன.

இந்த பக்கவிளைவுகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில், ஆண்டொன்றிற்கு 2.2% பேர் அல்லது சுமார் 700 பேர் மருத்துவமனையிலேயே இறந்துவிடுகிறார்கள் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

Share
தொடர்புடையது
09 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒன்றிணைவோம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வேண்டுகோள்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள வலுசக்தி விநியோகச்...

08 20
செய்திகள்உலகம்

ஈரான் மறுப்பு: ஜனாதிபதி ட்ரம்புடன் எவ்விதப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்திருந்த கருத்தை ஈரான்...

07 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேருந்து கட்டணங்கள் 12.19 சதவீதத்தினால் அதிகரிப்பு: இன்று நள்ளிரவு முதல் அமல்!

இலங்கையில் நிலவும் எரிபொருள் விலை உயர்வு மற்றும் சர்வதேச ரீதியிலான போர்ச் சூழலைக் கருத்திற்கொண்டு, நாடு...

06 19
உலகம்செய்திகள்

நியூயோர்க்கில் ஏர் கனடா விமானம் கோர விபத்து: இரு விமானிகள் உயிரிழப்பு; பயணிகள் படுகாயம்!

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள லாகார்டியா (LaGuardia) சர்வதேச விமான நிலையத்தில் ஏர் கனடா (Air...