செய்திகள்
இந்திய கிரிக்கெட் வீரர் மொஹமட் சிராஜின் நெகிழ்ச்சி செயல்
இந்திய கிரிக்கெட் வீரர் மொஹமட் சிராஜின் நெகிழ்ச்சி செயல்
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஜ், தனக்கு கிடைக்கப் பெற்ற பரிசுப் பணத்தை மைதான பணியாளர்களுக்கு வழங்கியுள்ளார்.
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெற்றது.
போட்டியில் இந்திய அணி பத்து விக்கட்டுகளினால் அபார வெற்றியீட்டியது. 21 ஓட்டங்களைக் கொடுத்து ஆறு விக்கட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்ற சிராஜ் போட்டியின் ஆட்டநாயகாக தெரிவானார்.
இதனால் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டு 5000 அமெரிக்க டொலர்கள் (இலங்கை ரூபா- 16 இலட்சம்) பணப் பரிசு சிராஜிற்கு வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட பணப் பரிசு முழுவதையும் அவர் மைதானப் பணியாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இந்த முழுப் பரிசுத் தொகையையும் அவர் மைதான பணியாளர்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
மேலும் மைதானப் பணியாளர்கள் இல்லாவிட்டால் போட்டியை நடத்தியிருக்க முடியாது என அவர் பாராட்டியுள்ளார்.
சிராஜ் மைதானப் பணியாளர்களுக்கு தனது பரிசுப் பணத்தை வழங்கியமை சமூக ஊடகங்களில் பெரிதாக பாராட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஏற்கனவே ஆசிய கிரிக்கெட் பேரவையும் ஶ்ரீலங்கா கிரிக்கெட்டும் கொழும்பு மற்றும் கண்டி மைதான பணியாளர்களுக்கு 50000 டொலர்களை பரிசாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.