rtjy 174 scaled
இலங்கைசெய்திகள்

தமிழர் தாயகத்தில் பல இரகசிய மனித புதைகுழிகள்

Share

தமிழர் தாயகத்தில் பல இரகசிய மனித புதைகுழிகள்

இன அழிப்புச் செய்யப்பட்ட சமூகத்துக்கான இறுதி நீதியாக இன விடுதலையே வழங்கப்பட வேண்டும், இதனை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்பாகவும் இருக்கும் எனவும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

வடக்கு – கிழக்கில் கொக்குத்தொடுவாய் போன்று மேலும் பல மனித புதைகுழிகள் இரகசியமாக காணப்படலாம் என்ற அச்சம் உள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கொக்குத்தொடுவாயில் மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டு அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் 17 எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளன. அவை தொடர்பில் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டியது அவசியமாகிறது.

இதேவேளை, வடக்கு, கிழக்கில் அசாதாரண காலத்தில் கடத்தப்பட்டவர்கள், காணாமலாக்கப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள் என்று ஆயிரக்கணக்கானவர்களுக்கு என்ன நடந்தது என்பது தற்போது வரையில் வெளிவராத நிலைமையிலேயே உள்ளது.

இந்நிலையில், வடக்கு, கிழக்கில் கொக்குத்தொடுவாய் போன்று மேலும் பல மனித புதைகுழிகள் இரகசியமாக காணப்படலாம் என்ற அச்சம் எமக்கு உள்ளது.

ஆகவே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் சர்வதேச தரப்பினர், வடக்கு, கிழக்கில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான தீர்மானத்தினை விரைந்து எடுத்து, துறை சார்ந்த நிபுணத்துவம் வாய்ந்தவர்களை பங்கேற்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அதன் மூலம் தமிழினத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் வெளிப்படுவதுடன், திட்டமிட்ட வகையில் இன அழிப்பு நடைபெற்றுள்ளது என்பதும் உறுதிப்படுத்தப்படும். எனவே, மனித புதைகுழி விடயத்தில் உள்நாட்டு ஆய்வுகள், தடய சேகரிப்புக்களுக்கு அப்பாலான நடவடிக்கைகள் அவசியம் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...