உலகம்செய்திகள்

ஜேர்மனிக்குச் செல்லும் இளவரசர் ஹரியின் மனைவி மேகன்: ஹரி கூறியுள்ள இதுவரை வெளிவராத ஒரு தகவல்

Share

ஜேர்மனிக்குச் செல்லும் இளவரசர் ஹரியின் மனைவி மேகன்: ஹரி கூறியுள்ள இதுவரை வெளிவராத ஒரு தகவல்

லண்டனில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரித்தானிய இளவரசர் ஹரி, தன் மனைவி மேகன் தன்னுடன் வர இயலாததால் அவர் கொஞ்சம் அப்செட்டாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

ஆனால், இன்று, தன் கணவரைக் காண ஜேர்மனி செல்கிறார் மேகன். போரில் காயம்பட்ட, உடல் உறுப்புகளை இழந்த, போர் வீரர்களுக்காக, இளவரசர் ஹரி துவக்கிய, இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டிகள் ஜேர்மனியில் நடைபெற்றுவருகின்றன.

அவற்றை ஹரி முறைப்படி துவக்கிவைத்த நிலையில், முதல் நாளில் மேகனால் ஜேர்மனிக்கு வரமுடியவில்லை. ஆகவே, அவர் இன்று தன் கணவருடன் இணைந்து விளையாட்டுப் போட்டிகளைக் கண்டு களிப்பதற்காக ஜேர்மனியின் Dusseldorfக்கு வருகிறார்.

இந்நிலையில் ஹரியின் மனைவி மேகன் குறித்த ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், மேகன் 43 சதவிகிதம் நைஜீரிய பின்னணி கொண்டவராம்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மேகன், நைஜீரிய அமெரிக்க நகைச்சுவையாளர், எழுத்தாளர் மற்றும் நடிகரான Ziwerekoru (Ziwe) Fumudoh என்பவரை சந்தித்தார். அப்போது மேகன், தானும் 43 சதவிகித நைஜீரியர்தான் என கூறினார். என்றாலும், எந்த வழியில் தான் நைஜீரியர் என அவர் விளக்கமளிக்கவில்லை.

இதே விடயத்தைக் குறித்து இன்விக்டஸ் விளையாட்டுப்போட்டிகளின்போது பேசிய இளவரசர் ஹரியும், தன் மனைவி நைஜீரிய வம்சாவளியினர் என்பதை சமீபத்தில் கண்டறிந்ததாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...