23 64fccfcc1859e
உலகம்செய்திகள்

கொலைக்களமாகும் மத்திய கிழக்கு நாடு! 100 பேர்களுக்கு மரண தண்டனை

Share

கொலைக்களமாகும் மத்திய கிழக்கு நாடு! 100 பேர்களுக்கு மரண தண்டனை

ஆண்டு பிறந்து இந்த 8 மாதங்களில் சவுதி அரேபியா நீதிமன்றங்கள் இதுவரை 100 பேர்களுக்கு மரண தனடனையை நிறைவேற்றியுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

பெரும்பாலான வழக்குகளில் சமூக ஊடக பதிவுகள் அல்லது போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மக்கள் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளனர். மட்டுமின்றி, முறையான விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகிறது.

மேலும், அதிகாரிகளின் கொலைப்பசியால் தற்போது சிறையில் இருக்கும் பல இளைஞர்கள் மரண பயத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்டில், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியரான முகமது பின் நாசர் என்பவருக்கு, சமூக ஊடக செயல்பாட்டுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் மீது தன் மதத்தை காட்டிக்கொடுத்தது, சமூக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல், அரசுக்கு எதிராக சதி செய்தல் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் பதியப்பட்டது.

ஆனால் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நாட்டில் தமக்கு எதிரான எதிர்ப்புக் குரல்களை ஒழிக்க முயற்சித்து வருவதையே அதிகரிக்கும் மரண தண்டனை எண்ணிக்கை காட்டுவதாகவும் பரவலாக கூறப்படுகிறது.

2015ல் இருந்தே சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் சல்மானின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன் உலகளவில் தனது நாட்டின் மதிப்பை உயர்த்தவும், தன்னை ஒரு நவீனத்துவவாதியாக சித்தரிக்கவும் அவர் முயன்று வருகிறார்.

வன்முறையை தூண்டாத குற்றங்களுக்கு மரண தண்டனையை குறைப்பதாக அவர் உறுதியளித்துள்ளார், ஆனால் அவரது ஆட்சியின் கீழ் வருடாந்தர மரணதண்டனைகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.

2015ல் இருந்து சவுதி அரேபியாவில் ஆண்டுக்கு சராசரியாக 129 பேர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. 2022ல் மட்டும் 196 பேர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத உச்சம் இதுவென கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...