உலகம்
மொராக்கோ நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 820 ஆக உயர்வு!
மொராக்கோ நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 820 ஆக உயர்வு!
மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 820 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று இரவு 6.8 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தினால் மாரகெச் நகர் அதிகமாக பாதிக்கப்பட்டது.
வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக பலியாகினர்.
முதற்கட்டமாக 296 பேர் பலியானதாகவும், 153 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 820 ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் 672 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதனால் துரித கதியில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. ரபாத் நகரில் 1,000 கூடாரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.