rtjy 27 scaled
இலங்கைசெய்திகள்

நாடு மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்லும் அபாயம்

Share

நாடு மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்லும் அபாயம்

நாட்டில் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டு வரிசை ஏற்படும் அபாயம் தலைதூக்கும் சாத்தியம் அதிகரித்துள்ளதாக புதிய மார்க்சிச லெனின் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்தில்வேல் தெரிவித்தார்.

இந்நிலையில் அண்மையில் பங்களாதேஷிடம் இருந்து பெற்றுக்கொண்ட கடனின் ஒரு பகுதி மீள வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த ஆட்சியாளர்கள் மக்களிடம் கூறியது என்னவென்றால் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் சர்வதேச நாணய நிதி கிடைத்தவுடன் நாங்கள் இலங்கையை சொர்க்கமாக்குவோம் என கூறியிருந்தனர்.

அண்மையில் பங்களாதேஷிடம் இருந்து பெற்றுக்கொண்ட கடனின் ஒரு பகுதி மீள வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. உண்மையில் அதுவல்ல பிரச்சனை.

2.9 பில்லியன் அமெரிக்க டொலரின் ஒரு பகுதியை தான் சர்வதேச நாணய நிதியம் வழங்கியிருந்தது. முழுக் கடனையும் அடைப்பதற்கு அவர்கள் வழங்கி இருக்கவில்லை.

இவர்கள் தொடர்ந்தும் கடன் வாங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். வேறு வேறு நாடுகள் வேறு வேறு அமைப்புகள், ஊடாக கடன் வாங்குகின்றார்கள் தவிர கடன் கொடுப்பதாக இல்லை.

தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலை தான் உள்நாட்டு கடனை மறுசீரமைக்கின்றோம் என்பது. இந்த EPF, ETF போன்ற மிகப்பெரிய நிதி இருக்கின்ற இடத்தில் கை வைத்துள்ளார்கள்.

அது எடுக்கப்பட்டால் இந்த மக்களுக்கு எதுவுமே இல்லை. இந்த ஆட்சியாளர்கள் ஒரு கடனை அடைப்பதற்கு மேலும் பல கடன்களை பெறுகின்றார்கள்.

இந்த ஆட்சியாளர்கள் வாங்குகின்ற வேலையைத் தான் செய்கின்றார்கள். ஏன் என்றால் நாட்டினுடைய உற்பத்தி , இந்த மக்கள் இணைந்து உற்பத்தியை பெருக்கினால் மட்டுமே இவர்கள் இந்த கடனில் இருந்து தவற முடியும் என்பது நிதர்சனம்.

இதன் மூலம் தான் தேசிய பொருளாதாரத்தை படிப்படியாக கட்டி அமைக்க முடியும் என தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...