இலங்கை
முச்சக்கரவண்டி பயணக்கட்டணம் குறித்து தகவல்
முச்சக்கரவண்டி பயணக்கட்டணம் குறித்து தகவல்
முச்சக்கரவண்டிகளின் பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை முச்சக்கரவண்டியாளர் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.
நேற்று நள்ளிரவு (31.08.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அதிகரித்துள்ளது.
இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 361 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 42 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 417 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 35 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒட்டோ டீசல் 341 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
மேலும், சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 01 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு லீட்டர் சுப்பர் டீசல் 359 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே எரிபொருள் விலை அதிகரித்த போதிலும் முச்சக்கரவண்டிகளின் பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை முச்சக்கரவண்டியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் சங்கத்தின் தலைவர் மேலும் கூறுகையில், கட்டண அதிகரிப்பானது பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள மக்களை மேலும் அசௌகரியப்படுத்தக்கூடும்.
எனவே, அதனை கருத்திற்கொண்டு, முச்சக்கரவண்டிகளின் பயணக் கட்டணத்தை அதிகரிக்க போவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.