tamilni 5 scaled
இலங்கைசெய்திகள்

சடுதியாக அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை

Share

சடுதியாக அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை

இன்று(31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை திருத்தப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தானம் அறிவித்துள்ளது.

சற்றுமுன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 361 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 42 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 417 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 35 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒட்டோ டீசல் இன்று முதல் 341 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 01 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 359 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

அதேபோல், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 231 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...