தொழில்நுட்பம்
Ubisoft நிறுவன சரிபாதி பங்குளை வாங்கிய சீன நிறுவனம்…!!!
Ubisoft நிறுவன சரிபாதி பங்குளை வாங்கிய சீன நிறுவனம்…!!!
பிரபல Assassins Creed கணனி விளையாட்டுக்களை உருவாக்கும் நிறுவனமான Ubisoft தன்னுடைய 49.9% பங்குகளை சீன நிறுவனம் ஒன்றிற்கு விற்றுள்ளது. Ubisoft நிறுவனம் பிராண்ஸ் நாட்டினை தாயமாக கொண்டு இருந்தாலும் உலகம் முழுவதும் பல கிளை நிறுவனங்களை கொண்டுள்ளது. ஒரு கிளை நிறுவனம் இந்தியாவில் இருக்கின்றது.
AAA தலைப்பு உடைய கணனி விளையாட்டுக்களை உருவாக்குவதன் மூலம் கணனி விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குத்துறையில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் நிறுவனம் தனது சரிபாதி பங்குளை அதாவது 297 மில்லியன் டாலர்களுக்கு, பிரபல தொலைபேசி விளையாட்டான PUBG இனை விளையாட்டினை உருவாக்கிய
Tencent நிறுவத்திற்கு விற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த சில வருடங்களாக சீனா நிறுவனங்கள் கணனி விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு துறையில் அதிக கவனம் செலுத்திவருகின்றார்கள் என்பதை அறிய முடிகின்றது.
Ubisoft நிறுவனமானது இது பற்றிய கருத்து தெரிவிக்கையில் சீன சந்தையில் கணனி விளையாட்டுக்களை எடுத்து செல்வதற்கான வழியாக இதனை கருதுவதாக கூறியிருந்தார்கள். உண்மையான காரணம் எதுவாக இருந்தாலும் கணனி விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு துறையில் சீனாவின் தலையீடு என்பது அதிகரித்துக்கொண்டு செல்கின்றது என்பது உண்மை.