இலங்கைசெய்திகள்

தமிழர்களின் அடையாளங்களை அழிப்பதை நிறுத்துங்கள்! எச்சரிக்கும் கஜேந்திரகுமார்

Share
tamilni 375 scaled
Share

தமிழர்களின் அடையாளங்களை அழிப்பதை நிறுத்துங்கள்! எச்சரிக்கும் கஜேந்திரகுமார்

தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் தமிழர்களின் தொல்லியல் அடையாளங்களை அழிக்கக்கூடியவகையில் செயல்படும் சிங்கள பௌத்தர்களின் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

‘கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெற்கில் அனுபவிக்கும் சுதந்திரத்தை தாம் வடக்கில் அனுபவிப்பதற்கு இடமளிக்கவேண்டுமென’ வலியுறுத்தி பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தலைமையிலான குழுவினர், அவரது கொழும்பு இல்லம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எமது செயற்பாடுகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மை வாய்ந்தவையாக இருக்கின்றன.

அதேபோன்று தமது கருத்துக்களை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான உரிமை சகலருக்கும் உண்டு. அதனை நாம் மறுதலிக்கவில்லை. அதேவேளை தாம் ஒருபோதும் சிங்கள பௌத்தத்துக்கு எதிரானவர்கள் அல்ல.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள நீண்டகாலமாக மதவழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் பௌத்த விகாரைகளை அப்புறப்படுத்துமாறு தாம் கோரவில்லை.

மாறாக எமது மக்களின் உரிமைகளைப் பறிக்கக்கூடியவகையிலும், தமிழர்களின் தொல்லியல் அடையாளங்களை அழிக்கக்கூடிய வகையிலும் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளையே நிறுத்துமாறு வலியுறுத்துகின்றோம்.

தொல்பொருள் சின்னம் அல்லது பௌத்த சின்னம் என்ற பெயரில் தமிழ்மக்களின் அடையாளங்களையும் சரித்திரத்தையும் அழிப்பதற்கோ அல்லது மாற்றியமைப்பதற்கோ நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். அதனை முன்னிறுத்தியே நாம் செயற்பட்டுவருகின்றோம் என தெரிவித்துள்ளார்.

மேலும், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமையை வன்மையாகக் கண்டிப்பதாகவும், இது வேண்மென்றே இனவாதத்தைத் தூண்டும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடு என்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சி அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...