tamilni 369 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் இரு புதிய வங்கிகள்

Share

இலங்கையில் இரு புதிய வங்கிகள்

அரச மற்றும் தனியார் பங்காளித்துவத்துடன் இலங்கையில் இரு வங்கிகளை அமைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச யோசனை முன்வைத்துள்ளார்.

பொரளையில் நேற்றுமுன் தினம் (26.08.2023) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்று இடம்பெற்றிருந்தது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், முதலீட்டு வங்கி ஒன்றையும் அபிவிருத்தி வங்கி ஒன்றையும் அமைக்க வேண்டும்.

பெரிய, சிறு மற்றும் நடுத்தர வணிகர்களின் நலன்களுக்கு சேவை செய்யும் இந்த இரண்டு வங்கிகளிலும் அரச மற்றும் தனியார் துறை இரண்டும் பங்குகளை வைத்திருக்க முடியும்.

மாறிவரும் உலகின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இவை அமைக்கப்பட வேண்டும். இந்த வங்கிகள் மூலம் நீண்ட கால மற்றும் குறுகிய கால கடன்களை அபிவிருத்தி வங்கி வழங்க முடியும்.

அதே நேரத்தில் முதலீட்டு வங்கி வெளிநாடுகளில் முதலீடு செய்ய விரும்பும் இலங்கை தொழில்முனைவோருக்கு உதவ முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...