இலங்கை
குழந்தைகள் தொடர்பில் பெற்றோருக்கு எச்சரிக்கை
குழந்தைகள் தொடர்பில் பெற்றோருக்கு எச்சரிக்கை
கையடக்கத் தொலைபேசி மற்றும் இணையத்திற்கு அதிக அடிமையாவதன் மூலம் குழந்தைகளுக்கு ஞாபக மறதி ஏற்படும் அபாயம் இருப்பதாக மனநல வைத்திய நிபுணர் ரூமி ரூபன் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகள் வீடியோ கேம்களுக்கு அடிமையாகிவிடுவது ஒரு தீவிரமான நிலை மற்றும் மனநோய் எனவும் வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாகவே குழந்தைகள் கல்வியில் தோல்வியடைவதுடன், பெற்றோர்களை எதிரிகளாக பார்ப்பதாகவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.
இந்த போதைப்பழக்கம் குழந்தைகளின் எதிர்காலத்தை முற்றாக அழிப்பதனால், குழந்தைகள் கையடக்கத் தொலைபேசி மற்றும் இணையத்தைப் பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்குமாறும் அறிவுறுதத்ப்பட்டுள்ளனர்.