உலகம்செய்திகள்

வாட்ஸ் ஆப் குரூப்பில் பகிர்ந்த விடயங்களுக்காக பணிநீக்கம்

Share

வாட்ஸ் ஆப் குரூப்பில் பகிர்ந்த விடயங்களுக்காக பணிநீக்கம்

ஜேர்மனியில், அலுவலகம் ஒன்றில் பணியாற்றிவந்த சிலர், தங்கள் வாட்ஸ் ஆப் குரூப்பில் தங்கள் சகப்பணியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை மோசமாக விமர்சித்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்டார்கள்.

சகப்பணியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை மோசமாக விமர்சித்த பணியாளர்கள்
ஜேர்மன் விமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்த சிலர், தங்கள் வாட்ஸ் ஆப் குரூப்பில், தங்கள் சகப்பணியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை, இன ரீதியாகவும், காயப்படுத்தும் வகையிலும், மனிதாபிமானமற்ற முறையிலும், பாலின ரீதியிலும் விமர்சித்ததுடன், அவர்கள் முகத்தில் குத்தவேண்டும் என்பது போன்ற வன்முறைக்கு வழிவகை செய்யும் கருத்துக்களையும் பல ஆண்டுகளாக பகிர்ந்துவந்துள்ளார்கள்.

ஆனால், அவர்களுடைய உரையாடல்கள், பணியாளர் கவுன்சில் மற்றும் மனித வள மேலாளர் ஆகியோருக்கு லீக்கானதைத் தொடர்ந்து, அந்த குரூப்பில் இருந்தவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

தாங்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து பணியாளர்களில் ஒருவர் நீதிமன்றம் சென்றுள்ளார். இது அவர்களுடைய தனிப்பட்ட விடயம் என்று கூறி, கீழ் நீதிமன்றம் ஒன்று பணியாளர்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்ததால், அவர்கள் பணியாற்றிவந்த நிறுவனம் பெடரல் தொழிலாளர் நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளது.

வழக்கை விசாரித்த பெடரல் நீதிமன்றம், அந்த வாட்ஸ் ஆப் குரூப்பிலிருக்கும் நபர்களின் எண்ணிக்கை பெரியது என்பதாலும், அவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் மற்றும் இன ரீதியாக விமர்சித்துள்ளதையும் பார்த்தால், பணி நீக்கம் செய்யப்பட்ட நபர் அவர்களுடைய விமர்சனங்களை தனி நபர் உரிமையாக பார்க்கமுடியாது என்று கூறி, அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது சரியே என தீர்ப்பளித்துவிட்டது.

Share
தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...