rtjy 224 scaled
இலங்கைசெய்திகள்

வவுனியாவில் இரு தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிராக நடவடிக்கை

Share

வவுனியாவில் இரு தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிராக நடவடிக்கை

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினரும், பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது முறைகேடான வகையில் செயற்பட்ட தனியார் வைத்தியசாலைகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சோதனை நடவடிக்கைகளானது இன்று(24.08.2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா வைத்தியசாலையில் அண்மையில் இடம் பெற்ற வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளரின் ஊடக சந்திப்பின் போது வவுனியாவில் உரிய தகுதி பெறாத வைத்தியர்கள் சிலர் தனியார் வைத்தியசாலைகளையும், மருந்தகங்களையும் நடத்துவதாக ஊடகவியலாளர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

இதனையடுத்து, வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அவர்களின் பணிப்புக்கு அமைய வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் போது,வவுனியா-நெளுக்குளம் பகுதியில் ஆயுள்வேத வைத்தியர் ஒருவர் தனியார் வைத்தியசாலையின் பேரில் மற்ற மருந்துகளை விநியோகம் செய்வது கண்டு பிடிக்கப்பட்டதுடன், அங்கிருந்த பெருந்தொகையான மருந்துகளும் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிதம்பரபுரம் பகுதியிலுள்ள ஒருவர் ஆயுள்வேத வைத்தியர் என்ற பெயரில் வைத்தியசாலை ஒன்றினை நடத்தி வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த வைத்தியசாலையில் இருந்த ஆயுள்வேத மற்றும் ஏனைய மருந்துகள் மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த நபர் ஆயுள்வேத வைத்தியர் இல்லை என்பதும் தெரியவந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த தனியார் வைத்தியசாலைகளை நடத்திய உரிமையாளர்கள் இருவரையும் விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த இரு நிலையங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Histopathological examination
இலங்கை

மரணத்தில் சந்தேகம் – விசாரணை செய்ய கோரும் தந்தை.

இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த 21 வயதுடைய யுவதியின் மரணத்தில்...

chemmani 22
இலங்கை

செம்மணி மனித புதைகுழியினை பார்வியிட்ட ஐரோப்பிய தூதுக்குழுவினர்.

இன்று, யாழ்ப்பாணம் – செம்மணி, சித்தப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனித புதைக்குழிகளை, ஐரோப்பிய ஒன்றிய...

dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...

Lanka Turkey
இலங்கை

துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின்...