இலங்கை
தமிழ் எம்.பிக்களின் வீடுகளை முற்றுகையிடசிங்கள பௌத்தர்களுக்கு கம்மன்பில அழைப்பு
ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் வேண்டியதை செய்யலாம் என்ற நம்பிக்கை உள்ளதால் தமிழ் அடிப்படைவாதிகள் பௌத்த மரபுரிமைகளை அழிக்கிறார்கள் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மேலும், சிங்களவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஆரம்பமாக கொழும்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீட்டின் முன்பாக இவ்வாரம் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இந்த போராட்டத்தில் சிங்கள பௌத்தர்கள் அனைவரும், இனவாத கொள்கையற்ற தமிழர்களும் கலந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“கஜேந்திரகுமார் பொன்னம்பலம கொள்ளுப்பிட்டியில் வாழ்கிறார். அவரின் தந்தையும் கொழும்பில் வாழ்ந்தார் . அவரது பாட்டனாரும் கொழும்பில் வாழ்ந்தார்.
இவர் கொழும்பில் வாழ்ந்துக் கொண்டு விடுமுறை நேரத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சென்று இனவாதத்தை பரப்பி அதனூடாக நாடாளுமன்றத்துக்கு தெரிவாகி சுகபோகமாக வாழ்ககையை வாழ்கிறார்.
அவர் கொழும்பில் வாழ்வதற்கு எவரும் இடையூறு விளைவிக்கவில்லை. அவரது பரம்பரைக்கும் எவரும் இடையூறு விளைவிக்கவில்லை.
கொழும்பில் உள்ள இந்து கோயில்களுக்கு நாங்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபடுகிறோம். தேசிய நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்பதை நாங்கள் பலமுறை வலியுறுத்தியுள்ளோம்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் சாதாரண தமிழர்கள் அடிப்படைவாத தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கைகளில் இருந்து வேறுப்பட்டுள்ளார்கள்.
அடிப்படைவாத பிரிவினைவாத கொள்கையுடைய தமிழ் அரசியல்வாதிகளின் பிடிகளில் இருந்து தமிழ் மக்களை விடுவித்தால் மாத்திரமே இந்த நாட்டில் இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த முடியும்.” என தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login