நான்கு ஏ சித்திகளை பெற்ற பல்கலைக்கழக மாணவன் தூக்கிட்டு தற்கொலை
இலங்கைசெய்திகள்

நான்கு ஏ சித்திகளை பெற்ற பல்கலைக்கழக மாணவன் தூக்கிட்டு தற்கொலை

Share

நான்கு ஏ சித்திகளை பெற்ற பல்கலைக்கழக மாணவன் தூக்கிட்டு தற்கொலை

கிளிநொச்சியில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விவேகானந்தா நகர் 155 ஆம் கட்டை பகுதியில் வசிக்கும் சந்திரமேனன் தேனுஜன் (வயது 21) என்ற பல்கலைக்கழக மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் 19.08.2023 தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், உயிரிழந்த மாணவன் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கணிதப்பிரிவில் கற்கும் மாணவன் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் உயிரிழந்த மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...