விமானம் பழுதுபட்டதால் தடைப்பட்ட அமைச்சரின் பயணத்திட்டம்
உலகம்செய்திகள்

விமானம் பழுதுபட்டதால் தடைப்பட்ட அமைச்சரின் பயணத்திட்டம்

Share

விமானம் பழுதுபட்டதால் தடைப்பட்ட அமைச்சரின் பயணத்திட்டம்

விமானம் பழுதானதால் ஜேர்மன் வெளியுறவு அமைச்சருடைய பயணத்திட்டம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த விமானங்களுக்கு ஓய்வு கொடுப்பது என ஜேர்மன் அரசு முடிவு செய்துள்ளது.

ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Annalena Baerbock, ஒரு வார அரசு முறைப் பயணமாக, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஃபிஜி ஆகிய நாடுகளுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், அவர் பயணம் செய்த விமானத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக அவர் இரண்டு முறை அபுதாபிக்குத் திரும்ப நேர்ந்தது.

அதனால், தனது பயணத்திட்டத்தையே ரத்து செய்துவிட்டார் Annalena.

இப்படி விமானம் பழுதானதால் அமைச்சரின் பயணம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் பயணித்த விமானம் உட்பட இரண்டு பழைய ஏர்பஸ் விமானங்களுக்கு விடைகொடுக்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், Annalena பயணித்த விமானம் இன்னமும் அபுதாபியிலேயேதான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...