தொழில்நுட்பம்
Smartphones தயாரிப்பில் புதிய சட்டத்தை கொண்டுவந்த ஐரோப்பிய ஒன்றியம்…!!
Smartphones தயாரிப்பில் புதிய சட்டத்தை கொண்டுவந்த ஐரோப்பிய ஒன்றியம்…!!
ஜரோப்பிய ஒன்றியமானது 2027 ஆம் ஆண்டவளவில் அனைத்து தொலைபேசிகளும் மின்கலத்தை மாற்றக்கூடிய வகையில் வெளியிட வேண்டும் என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கின்றார்கள்.
2027க்குள் அனைத்து தொலைபேசிகளிலும் மாற்றக்கூடிய மின்கலங்கள் இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றது. இந்த வாரம், ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்தில் இந்த ஒழுங்குமுறையை ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆப்பிள், சாம்சங் மற்றும் கூகுள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் கழிவுகளைக் குறைப்பதற்காக இந்த ஒழுங்குமுறையை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பழுதுபார்க்கும் உரிமை இயக்கத்திற்கு இது மிகப்பெரிய வெற்றி. இத்தகைய கட்டுப்பாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மட்டுமே பொருந்தும் என்றாலும், இந்த கட்டுப்பாடு உலகளாவிய மாற்றங்களைக் கொண்டுவரும், ஏனெனில் இரண்டு வெவ்வேறு தொலைபேசிகளை எந்த ஒரு நிறுவனமும் தயாரிக்கப்போவது இல்லை, அது அவர்களுக்கு தேவையற்ற தலையிடியினையே கொடுக்கும். அவ்வாறு தயாரித்தால் ஒன்று ஐரோப்பாவிற்கு, மற்றையது நாடுகளுக்குமானதாக இருக்கும். இந்தக்கட்டுப்பாடு உலகளாவிய சந்தையை பாதிக்கும் என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் கருத்து தெரிவிற்கின்றனர் அத்துடன் அனைத்து சந்தையில் இருக்கும் தொலைபேசிகளின் வடிவமைப்பை மாற்றும் என்றும் சொல்கின்றார்கள்.
2022 ஆம் ஆண்டு ஒரு ஒழுங்குமுறையை நிறைவேற்றியது, அதாவது ஐபோன்கள் USB-C போர்ட்டைக் கொண்டிருக்க வேண்டும், இது உலகளாவிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். எதிர்வரும் மாதம் வரவுள்ள iPhone 15 series USB – C இனைக்கொண்டதாக இருக்கும்.
தொலைபேசிகளில் “அகற்றக்கூடிய மற்றும் சாதாரண பயனரால் மாற்றக்கூடியதாக” இருக்க வேண்டும், அதாவது எந்தவொரு தொழில்நுட்ப நிபுணத்துவமும் இல்லாமல் மின்கலத்தை மாற்றுவது எளிதாக இருக்க வேண்டும். EU சட்டத்திற்கு இணங்க உற்பத்தியாளர்கள் 2027 வரை தங்கள் ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பை மாற்றியமைக்க வேண்டும். பயன்படுத்திய மின்கலங்களை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய மீழ்சழற்சி பொருளாதாரத்தை உருவாக்கும் நம்பிக்கையில், EVகள் மற்றும் இ-பைக்குகள் உட்பட அனைத்து மின்கலங்களுக்கும் இந்த கட்டுப்பாடு பொருந்தும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்து இருக்கின்றது.
You must be logged in to post a comment Login