கடற்கரையில் மாயமான குழந்தையை தேட மக்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்
உலகம்செய்திகள்

கடற்கரையில் மாயமான குழந்தையை தேட மக்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்

Share

கடற்கரையில் மாயமான குழந்தையை தேட மக்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்

ஒன்ராறியோவிலுள்ள கடற்கரை ஒன்றில் ஆறு வயது சிறுமி ஒருத்தி காணாமல் போனதாக தகவல் வெளியானதும், கடற்கரைக்கு வந்திருந்த மொத்தக்கூட்டமும் கடலில் இறங்கிய நெகிழவைக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

ஒன்ராறியோவின் Edward County beach என்னும் கடற்கரையில் கடந்த வாரம் ஆறு வயது சிறுமி ஒருத்தி காணாமல் போனாள். தகவலறிந்து கடற்கரைக்கு வந்த பொலிசார் கண்ட காட்சி அவர்களை நெகிழவைத்துள்ளது.

ஆம், குழந்தை கடலில் விழுந்திருக்கலாம் என்ற தகவல் கிடைக்கவே, கடற்கரைக்கு வந்திருந்த மொத்தக் கூட்டமும் கடலில் இறங்கியுள்ளது.

ஒரு வலை போல, பிள்ளையைத் தவறவிட்டுவிடக்கூடாதென எண்ணி, அனைவரும் கடல் நீரை அங்குல அங்குலமாக அலசியுள்ளனர்.

அரை மணி நேரத்துக்குள் அந்த சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளாள். குழந்தையைக் காப்பாற்றுவதற்காக சற்றும் தயங்காமல் கடலில் இறங்கிய பொதுமக்களுக்கு தங்கள் சிறப்பு நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Share

1 Comment

தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....