ராஜ குடும்பத்தில் நடைபெற இருக்கும் மிக முக்கிய நிகழ்ச்சி: ஹரி மேகனிற்கு அழைப்பில்லை
உலகம்செய்திகள்

ராஜ குடும்பத்தில் நடைபெற இருக்கும் மிக முக்கிய நிகழ்ச்சி: ஹரி மேகனிற்கு அழைப்பில்லை

Share

ராஜ குடும்பத்தில் நடைபெற இருக்கும் மிக முக்கிய நிகழ்ச்சி: ஹரி மேகனிற்கு அழைப்பில்லை

ராஜ குடும்பத்திற்கு அவமானத்தைக் கொண்டுவந்த இளவரசர் ஆண்ட்ரூ கூட தன் முன்னாள் மனைவியுடன் அந்த முக்கிய நிகழ்வில் கலந்துகொள்கிறார். ஆனால், இளவரசர் ஹரிக்கும் அவரது மனைவிக்கும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு இல்லை!

அடுத்த மாதம் 8ஆம் திகதியுடன், மன்னர் சார்லசின் தாயாகிய எலிசபெத் மகாராணியார் மரணமடைந்து ஒரு ஆண்டு முடிவடைகிறது.

மகாராணியார் மறைந்ததன் ஓராண்டு நிறைவை நினைவுகூறும் நிகழ்ச்சி ஒன்று, செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி பால்மோரல் மாளிகையில் நடைபெற உள்ளது. அதில், மன்னர் சார்லஸ், ராணி கமீலா உட்பட ராஜ குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

இளவரசர் ஆண்ட்ரூவும் அவரது முன்னாள் மனைவியான சாரா ஃபெர்குசனும்கூட அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் நிலையில், மறைந்த மகாராணியாரின் செல்லப் பேரனான இளவரசர் ஹரிக்கும் அவரது மனைவியான மேகனுக்கும் மகாராணியாரின் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லை.

இத்தனைக்கும், ஹரி, செப்டம்பர் 9ஆம் திகதி ஜேர்மனியில் துவங்க இருக்கும் இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டிகளைத் துவக்கி வைப்பதற்காக Düsseldorf நகருக்கு வருகிறார்.

ஆகவே, அவர் மகாராணியாரின் நினைவு நாள் நிகழ்ச்சியில் எளிதாக கலந்துகொள்ள முடியும். ஆக, ஹரி மகாராணியாரின் நினைவு நாள் நிகழ்ச்சியின்போது ஐரோப்பாவிலேயே இருந்தும் கூட அவருக்கு அழைப்பு இல்லை என கூறப்படுகிறது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...