பொலன்னறுவையில் குடும்பஸ்தர் சுட்டுப்படுகொலை
இலங்கைசெய்திகள்

பொலன்னறுவையில் குடும்பஸ்தர் சுட்டுப்படுகொலை

Share

பொலன்னறுவையில் குடும்பஸ்தர் சுட்டுப்படுகொலை

பொலன்னறுவை – இலங்காபுரம் பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் இன்றையதினம் (04.08.2023) பதிவாகியுள்ளது.

இலங்காபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 42 வயதையுடைய ஆர்.சமரக்கோன் என்பவரே வீட்டில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வர் கொண்ட குழுவே குறித்த குடும்பஸ்தர் மீது துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு விட்டு தப்பியோடியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
6 18
இலங்கைசெய்திகள்

பாதாள உலகில் 18 பெண்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா உட்பட, இந்த வருடம் ஜனவரி 1 ஆம் திகதி முதல்...

5 18
இலங்கைசெய்திகள்

கொழும்பிலிருந்த செவ்வந்தியை தமிழர் பகுதிக்கு அழைத்து சென்ற சிஐடியினர்

குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொலிஸாரின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, கிளிநொச்சிக்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச்...

4 18
இலங்கைசெய்திகள்

சிங்கள மொழி தெரியாதமையால் ஆபத்தான கும்பலிடம் சிக்கிய தக்சி

குற்றக் கும்பலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கும்பலிடம் சிங்களம் தெரியாத நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தக்சி...

3 18
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தியுடன் நெருங்கிய தொடர்பில் முக்கிய பிரமுகர்கள்! வெளிவரும் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியுடன் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நெருங்கிய...